இறந்த
பின்பு ஒரு வருடம் செய்ய வேண்டிய கடமைகள் யாவை?
1. ஒருவர்
இறந்த உடன் தனது ஸ்துல உடம்பினை விட்டு சூக்சம உடலை அடைகின்றனர்.
2. இறந்தவரால்
நாம் பேசுவதை கேட்க முடியும். ஆனால் அவர்கள் பேசுவதை நாம் கேட்க முடியாது.
3. இறந்தவர்கள்
மனோ வேகத்தில் செல்ல முடியும். அவர்கள் இந்த உலகத்தில் உள்ள பௌதிக ரீதியிலான விதிகளுக்கு
உட்பட்டவர்கள் கிடையாது.
4. இறந்த
பின்பு 12 நாட்கள் அவர்கள் இந்த பூமியில்தான்
இருப்பார்கள்.
5. தன்னுடைய
குடும்பத்தினர் பேசுவது மற்றும் நடப்பதை முற்றிலும் தெரிந்து இருப்பார்கள்.
6. 13 வது நாள் அவர்கள் யம தூதுவர்களால் மேல் லோகத்திற்கு அழைத்து செல்ல
படுவார்கள்.
7. தேவர்களுக்கு
ஒரு நாள் என்பது நமக்கு ஒரு வருடம் ஆகும்.
8. ஆத்மாக்கள்
நமது நேரப்படி ஒரு வருடம் பூலோகத்தில் இருந்து மேல் லோகம் நோக்கி பயணப்பட வேண்டும்.
9. பயண
நேரத்தில் பலவிதமான துன்பங்களுக்கு ஆட்பட நேரிடும்.
10. ஒவ்வொரு
மாதமும் தங்கள் செய்த நன்மை மற்றும் தீமையின் அடிபடையில் வேவ்வேறு விதமான
துன்பங்களை அனுபவித்து கொண்டே நடந்து செல்ல வேண்டும்.
11. அப்போது
அவர்களுக்கு மோசமான பசியும் தாகமும் ஏற்படும். கடுமையான குளிர் அல்லது வெயில்
அவர்களை வாட்டி எடுக்கும்.
12. இறந்தவரின்
பிள்ளைகள் முதல் 12 நாட்களுக்கு தானம் கொடுப்பது மிகவும்
நல்லது.
13. இறந்த
நாள் அன்றோ அல்லது 12வது நாள் அன்றோ தானம் கொடுப்பது மிகவும்
நல்லது.
14. தச
தானம் (10): பசு, நிலம், கருப்பு எள்ளு, தங்கம், பசு
நெய், ஆடை, தானியம், வெல்லம், வெள்ளி, கல் உப்பு
ஆகியவையாகும்.
15. பஞ்ச
தானம் (5): புஸ்தகம், தண்ணீருடன் கூடிய
சொம்பு, மணி, எரிந்து கொண்டு இருக்கும்
விளக்கு, வஸ்திரம்.
16. உணவு,
தண்ணீர், குதிரை, பசு
மாடு, வஸ்திரம், பூமி, படுக்கை, ஆசனம் ஆகிய 8 பொருட்களும்
மிகவும் தானம் கொடுப்பது இறந்தவர்களுக்கு மிகுந்த சுகத்தினை கொடுக்கும்.
17. இதில்
மேலே சொல்லப்பட்டவைகலை அனைத்துமோ அல்லது தனித்தனியாகோவோ அவரவர் வசதி படி அல்லது
விருப்பபடி கொடுக்கலாம்.
ஒரு
வருடம் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள்.
1. இறந்த முதல் 12 நாட்கள் பித்ருகளுக்கு தர்ப்பன்ணம் செய்வது மிகவும் முக்கியம்.
2. வீட்டில்
உள்ளவர்கள் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும்.
3. வீட்டில்
உள்ள பெண்கள் தலைக்கு குளித்தது ஈர உடையுடன் பச்சை அரிசி சாதம் செய்ய வேண்டும்.
4. இதற்க்கு
தனி பாத்திரம் உபயோகிக்க வேண்டும். இரும்பு, எவர்சில்வர்,
கண்ணாடி, பிளாஸ்டிக், பீங்கான்
போன்ற பாத்திரம் உபயோகிக்க கூடாது.
5. வெள்ளி,
பித்தளை, மண்பாண்டம், செம்பு
போன்ற பாத்திரங்கள் மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
6. சூரிய
உதய நேரத்தில் இறந்தவர்களுக்கு பிண்டம் (உணவு) அளிக்க வேண்டும்.
7. இறந்தவரின்
படத்தினை வைத்து அதன் முன்பு வாழை இலை வைத்து பச்சை அரிசி சாதத்தினை படைக்க வேண்டும்.
8. கிழக்கு
அல்லது தெற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.
9. இறந்தவரின்
கணவர் மற்றும் மகன்கள் செய்வது மிக நல்ல பலனை கொடுக்கும்.
10. கொடுப்பவர்கள்
மிகுந்த சுத்தமாக இருக்க வேண்டும்.
11. மணி
அடித்து சாமி கும்பிட கூடாது. தீப ஆராதனை காண்பித்து வழிபடலாம்.
12. பிண்ட
தர்ப்பணம் கொடுப்பவர்கள் தன்னுடைய வலது உள்ளங்கையில் கருப்பு எள் வைத்து அதில்
சிறிதளவு தண்ணீர் இட்டு இறந்தவரை வணங்கி தன்னுடைய வலக்கையில் உள்ள ஆள்காட்டி
விரலையும் பெருவிரலையும் சேர்த்து அதன் இடையில் எள்ளும் தண்ணீரும் கீழே உள்ள
சாதத்தில் விழுமாறு பார்த்து கொள்ள வேண்டும். (வலது கையினை சற்று வலது புறம்
சாய்த்தால் எள்ளும் தண்ணீரும் பெரு விரல் மற்றும் ஆள்காட்டி விரல் வழியாக வழிந்து
விடும்.)
13. தர்ப்பணம்
கொடுக்கும் பொழுது மனமுருகி தொழுது எள்ளையும் தண்ணீரையும் ஏற்று மன சாந்தி ஏற்பட
வேண்டுமாறு வணங்க வேண்டும்.
14. இறந்தவர்களுக்கு மாமிச உணவு படைப்பது மிகுந்த துன்பத்தை
தரும்.
Comments
Post a Comment